ADDED : மார் 24, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
மேலுார்: இடையபட்டி இந்தோ திபெத் எல்லை 45வது படைப்பிரிவு முகாமிற்குள் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வீரர்கள், ஸ்டார் குரு சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து குளத்தை துார்வாரி தண்ணீரை சேமித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
கமாண்டென்ட் ராஜிவ் குப்தா, டிரஸ்ட் நிறுவனர் குருசாமி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியை துணை கமாண்டென்ட் மோகனசுந்தரம் ஒருங் கிணைத்தார்.
