ADDED : பிப் 10, 2025 04:53 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தின் கூரை சேதமடைந்துள்ளதால் மழைநீர் ஒழுகி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வடக்கு, தெற்கு தாலுகாக்களுக்குரிய 2 இ சேவை மையங்கள் உள்ளன. அரசு கேபிள் 'டிவி' பிரிவின் கீழ் இயங்கும் இம்மையங்களில் ஆதார் அட்டையில் முகவரி, வயது, போன் எண் உட்பட  திருத்தம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்கின்றன. வடக்கு தாலுகா அருகில் உள்ள மையம் அங்குள்ள கார் ஷெட்டில் செயல்படுகிறது. இதன் உட்பகுதி கூரையில் பால்ஸ் சீலீங் அமைத்துள்ளனர். இது சேதமடைந்து அவ்வப்போது உதிர்ந்து விழுகிறது.
மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி அறை முழுவதும் வியாபித்து நிற்கும். அதுபோன்ற நேரத்தில் பொதுமக்கள் இங்கு ஆதார் அட்டை திருத்தப் பணிகளுக்கு வருவதில்லை. இதே நிலைதான் தெற்கு தாலுகாவில் உள்ள இ சேவை மையத்திலும் உள்ளது. இதுகுறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. மழைக்காலம் முடிந்துவிட்ட நிலையில் இம்மையங்களின் கூரையை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

