ADDED : டிச 20, 2025 05:12 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் புதிய ரோடு அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
மன்னாடிமங்கலம் இரும்பாடி வைகையாற்று பாலத்தில் இருந்து சோழவந்தான் - பள்ளப்பட்டி ரோட்டில் பாலகிருஷ்ணா புரம் பிரிவு வரை புதிய ரோடு அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
இந்த ரோடு 3.6 கி.மீ., நீளத்திற்கு இரட்டை வழிப் பாதையாக மாற்ற ரூ.4 கோடி செலவிடப்படும்.
இதற்கான பூமிபூஜையில் ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பாலராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பண்ணைச்செல்வம், துணைச் செயலாளர்கள் தியாக முத்துப்பாண்டி, ஜெகன் முன்னிலை வகித்தனர்.
உதவிப் பொறியாளர் கவுதம், சேர்மன்கள் பால்பாண்டியன், ஜெயராமன், நகர் செயலாளர் சத்யபிரகாஷ், இளைஞரணி வெற்றிச்செல்வன், விளையாட்டு அணி திலீபன் பங்கேற்றனர்.
