ADDED : ஜூலை 11, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார், வாடிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கான பூமி பூஜை ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பில் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் அரவிந்த், ஒன்றிய கமிஷனர்கள் வள்ளி, கலைச்செல்வி,தி.மு.க., அவை தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய உதவி பொறியாளர் விக்னேஷ் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், நகர் செயலாளர் ரகுபதி, ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.