ADDED : மார் 29, 2026 11:25 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு திருப்பாலை இ.எம்.ஜி.,யாதவா பெண்கள் கல்லுாரியில் நடந்தது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் தலைமையில் பயிற்சி அளித்தனர். தாசில்தார்கள் பாண்டி, சிவகாமிநாதன், துணைத்தாசில்தார் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மொத்தம் 1329 பேரில் 1186 பேர் கலந்து கொண்டனர். ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் நிலை 1, 2, 3 ஆகியோருக்கு மின்னணு இயந்திரங்களை வைத்து ஓட்டுப்பதிவு செய்வது குறித்தும், ஓட்டுச்சாவடியில் ஒவ்வொருவருக்கான பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஏப்.11 ல் இரண்டாம் கட்ட பயிற்சி நடக்க உள்ளது.
