UPDATED : நவ 15, 2026 08:14 PM
ADDED : நவ 15, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரை சர்வேதேச விமான நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின்படி எபோலா முன்னேச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வலையங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன், தோப்பூர் ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக நோய்மருத்துவமனை ஆர்.எம்.ஒ. டாக்டர் ஸ்ரீ லதா, விமான நிலைய மருத்துவர் சுதர்சன், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் மனோஜ் பங்கேற்றனர்.
எபோலா பாதித்தவர்கள் வந்தால், பாதுகாப்பாக விமான நிலையத்திலிருந்து ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக நோய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது வரை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் அழகுமலை, சுரேஷ் குமார், கேசவன் ஒருங்கிணைத்தனர்.
