/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வியும் உழைப்பும் மாணவர்களை உயர்த்தும்
/
கல்வியும் உழைப்பும் மாணவர்களை உயர்த்தும்
ADDED : ஆக 03, 2025 04:35 AM
பேரையூர் : டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம நிறுவனர் வெங்கடாசலபதி 116 வது பிறந்தநாள் விழா நடந்தது. ஆசிரமத் தலைவர் ரகுபதி வரவேற்றார்.
உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பேசுகையில், ''மாணவர்கள் பாரதி கவிதைகளின் பொருளை உணர்ந்து வாழ்வில் கடைபிடித்து உயரவேண்டும். கல்வியும் உழைப்புமே மாணவர்களை வாழ்வில் நிச்சயம் உயர்த்தும்'' என்றார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசுகையில், ''பாரதியார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண் உரிமைக்கு குரல் கொடுத்தவர். இன்று நீதித்துறையில் அதிக பெண் வழக்கறிஞர்கள் உள்ளனர்'' என்றார். செயலாளர் ராகவன் விருந்தினர்களை கவுரவித்தார். பள்ளிச் செயலாளர் கீதா நினைவு பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் லிங்கம் நன்றி கூறினார்.

