/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிசம்பருக்குள் 'திறன்' மாணவர்கள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை கல்வித்துறை ஜரூர்
/
டிசம்பருக்குள் 'திறன்' மாணவர்கள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை கல்வித்துறை ஜரூர்
டிசம்பருக்குள் 'திறன்' மாணவர்கள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை கல்வித்துறை ஜரூர்
டிசம்பருக்குள் 'திறன்' மாணவர்கள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை கல்வித்துறை ஜரூர்
ADDED : நவ 25, 2025 05:02 AM
மதுரை: அரசு பள்ளிகளில் 'திறன்' (ஸ்லோ லேனர்ஸ் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திட்டம்) மாணவர்கள் எண்ணிக்கையை டிசம்பருக்குள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தயாளன் தெரிவித்தார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில ரேங்க் பட்டியலில், மதுரையை ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி குறைவான அரசு பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடம் நேரடியாக விளக்கம் கேட்டு தேர்ச்சியை அதிகரிக்க அவர்களின் ஆலோசனை பெற திட்டமிடப்பட்டுள்ளது.
'திறன்' திட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதத் திறனை மேம்படுத்த பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தனி வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அவர்களின் கற்றல் அடைவை ஆய்வு செய்து டிசம்பருக்குள் 'திறன்' மாணவர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின் ரெகுலர் வகுப்புகளில் வழக்கம்போல் படிக்க ஏற்பாடு செய்யப்படும். தொடக்க கல்வியில் மாணவர்கள் வாசிப்புத் திறனை அதிகரிக்க செய்யும் எண்ணும் எழுத்து திட்டத்தையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'தினம் ஒரு பள்ளி' என்ற அடிப்படையில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் ஆய்வு நடைமுறை தொடரும். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

