ADDED : ஜூலை 13, 2025 04:38 AM
உசிலம்பட்டி: மதுரை நாடார் மகாஜன சங்கம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வித்திருவிழா பேச்சு போட்டி நடந்தது.
45க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 6 முதல் 12ம் வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி பரிபாலனசபை செயலாளர் நடராஜன், தலைவர் பிரசாத்கண்ணன், தலைமை ஆசிரியர்கள் மதன் பிரபு, பரமசிவம், மகாஜன சங்கம் சார்பில் அசோகன், வெற்றிவேல், துரைப்பாண்டி, பாலகுரு, எம்.எல்.ஏ., அய்யப்பன், அ.தி.மு.க., நகர் செயலாளர் பூமா ராஜா, பா.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், அரசு வழக்கறிஞர் ராஜசேகர், வழக்கறிஞர் நாகராஜ் உள்ளிட்டோர் பரிசு, சான்றிதழ் வழங்கினர். ஆசிரியர் பொன்ரமேஷ் நன்றி கூறினார்.