சேது பொறியியல் கல்லுாரியில் கல்வி ஊக்கத்தொகை தேர்வு
சேது பொறியியல் கல்லுாரியில் கல்வி ஊக்கத்தொகை தேர்வு
ADDED : ஏப் 11, 2026 08:38 PM
மதுரை: மதுரை சேது பொறியியல் கல்லுாரியில் அதன் நிறுவனர் முகமது ஜலில் தலைமையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை தேர்வு நடந்தது.
நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகம்மது அலியார், நிலாபர் பாத்திமா, நாச்சியா பாத்திமா முன்னிலையில் முதல்வர் சிவக்குமார் மேற்பார்வையில், பேராசிரியர்கள் தேர்வை நடத்தினர். இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் நடந்த கருத்தரங்கில் தன்னம்பிக்கை பேச்சாளர் சண்முக திருக்குமரன் பேசினார். பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை நடந்தது.
