தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‘ரெயின் கோட்’ இன்றி தவிக்கும் எட்டாயிரம் தீயணைப்பு வீரர்கள்

‘ரெயின் கோட்’ இன்றி தவிக்கும் எட்டாயிரம் தீயணைப்பு வீரர்கள்

‘ரெயின் கோட்’ இன்றி தவிக்கும் எட்டாயிரம் தீயணைப்பு வீரர்கள்


UPDATED : அக் 19, 2026 06:35 PM

ADDED : அக் 19, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 06:35 PM ADDED : அக் 19, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: வெள்ள மீட்புப் பணிகளுக்காக மாநிலம் முழுவதும் தயாராக உள்ள தீயணைப்புத் துறை வீரர்களுக்கு ‘ரெயின் கோட்’ உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கும்படி, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மழை, வெள்ளப் பாதிப்புகளில் பொதுமக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், உணவு, தங்குமிடம், தேவையான உடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அத்துடன் பல்வேறு செலவுகளை சொந்தப் பணத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தீயணைப்பு வீரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

வெள்ள மீட்புப் பணிகளுக்காக தயாராக இருக்கிறோம். ஆனால் 8 ஆயிரம் வீரர்களுக்கான ‘ரெயின் கோட்’ இன்னும் தரவில்லை. வெளியூர் பணிக்குச் செல்லும் வீரர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட செலவின தொகை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே உயர்த்தப்படுகிறது. அதுவரை பயணம், உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சொந்தப் பணத்தில்தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் 6 முதல் 8 மணி நேரத்தில் சென்னையை அடையலாம் என்ற சூழல் இருந்தும், பணியாளர்களை நீண்டகாலம் முகாம்களில் தங்க வைத்து பணியில் ஈடுபடுத்துவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மழைக்காலம் முழுவதும் நீடிக்கும் இந்தப் பணி முறையால் குடும்பங்களைப் பிரிந்து பணியாற்றும் நிலையை உருவாக்குகிறது. வெள்ளமீட்பு பணியில் முன்னணியில் செயல்படும் தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us