நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி :   மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் ஐன்ஸ்டீன் தின விழா கொண்டாடப்பட்டது. சிலைக்கு முதல்வர் சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துறை தலைவர் மினிமாலா வரவேற்றார். துணை முதல்வர் கணேசன் அறிமுக உரையாற்றினார். வினாடி வினா உள்பட பல்வேறு போட்டிகளில் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
லேடி டோக் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. பேராசிரியர்கள் சரவணகுமார், பிரேம்குமார், சங்கரநாராயணன், நாராயணமூர்த்தி, செண்பக பாலகிருஷ்ணன், நித்யா, முருகலட்சுமி ஒருங்கிணைத்தனர்.
மாணவி மிருதுபாஷினி, மாணவர் ஜெயகாண்டீபன் தொகுத்துரைத்தனர். பேராசிரியர் சர்வேஸ்வரன் நன்றி கூறினார்.

