ADDED : அக் 29, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சிவகங்கையை சேர்ந்தவர் டாக்டர் மாதவன். மதுரை கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்வி குழும நிறுவனர். மலேசியாவில் கோத்தபிலுடு லயன்ஸ் கிளப்பின் தலைவராக 4வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் மலேசியாவில் செய்யும் சமூக சேவைகள், மலேசிய சபாவின் தமிழ் கோயில்களை நிர்வகிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக மலேசியா அரசு இவருக்கு ஏற்கனவே 'டத்தோ' பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு லதாமாதவன் கல்லுாரி இணைச் செயலாளர் ஜெகன், முதல்வர்கள், துணை முதல்வர்கள்,பேராசியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

