ADDED : மார் 15, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வெள்ளாள பிள்ளைமார் மகாசபை தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நிறுவன தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகி சதீஷ்குமார், அகமுடையோர் சங்க மாநில தலைவர் ரஜினிகாந்த், யாதவர் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, வெள்ளாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஜோதி முருகன், பிள்ளைமார் சங்க மாநில பொறுப்பாளர் மயிலேறி, நிர்வாகிகள் சுரேந்தர், திருக்குமரன், அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறுவனத் தலைவர் ஆறுமுகம் போட்டியிடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
