ADDED : மார் 25, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சமூகஅறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் அப்பன்திருப்பதி பூண்டி கிராமத்தில் முகாம் நடந்தது. ஓட்டளிப்பது, போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் நிகழ்ச்சிகள் நடந்தன.
திருமங்கலம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா, தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் கர்ணன் ஆகியோர் பேசினர். உதவிப் பேராசிரியர் சார்லஸ் நன்றி தெரிவித்தார். மாணவர்கள் இயக்கம் சதீஷ், பத்மபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
