ADDED : மார் 29, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடந்தது. உதவி தேர்தல் அதிகாரி முத்துப்பாண்டி வரவேற்றார். தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா தலைமை வகித்தார்.
கரகம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விளம்பர பதாகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. தொடர்ந்து நுாறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கியபடி அதிகாரிகள் ஊர்வலமாக சென்றனர். தேர்தல் பிரிவு தாசில்தார் சுந்தரபாண்டி, வருவாய்த்துறை அலுவலர்கள் முருகானந்தம் ராஜ்குமார், கண்ணன், சுதர்சன் பங்கேற்றனர்.
