ADDED : ஏப் 06, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.,) சார்பில் பயணிகள், பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., சித்ரா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், முரளி மற்றும் அலுவலக ஊழியர்கள் குழுவினர் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு மற்றும் 'என் ஓட்டு, என்உரிமை' என்ற கோஷத்தை வலியுறுத்தி, பயணிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். மினிபஸ்கள், ஆட்டோ, வேன்கள் உட்பட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினர். அலுவலகத்திலும் நுாறுசதவீத ஓட்டுப்பதிவு தொடர்பாக பதாகைகளை அமைத்தனர்.
