ADDED : ஜூலை 26, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி இறந்ததையடுத்து நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் மணிகண்டன் தேர்தலை நடத்தினார்.
தி.மு.க., 8, காங்., 4, சுயே., 1 என 13 கவுன்சிலர்களில் 7வது வார்டு காங்., கவுன்சிலரும், இறந்த குருசாமியின் மகனுமான காமாட்சி வேட்பு மனுதாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை தி.மு.க., மாவட்ட செயலாளர் மணிமாறன், இரு கட்சிகளின் நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள் வாழ்த்தினர்.