தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேர்தல் சோதனை: ரொக்கம் பறிமுதல்

 தேர்தல் சோதனை: ரொக்கம் பறிமுதல்

 தேர்தல் சோதனை: ரொக்கம் பறிமுதல்


ADDED : மார் 17, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ. 1 லட்சம் பறிமுதல் திருமங்கலம் தொகுதியில் கள்ளிக்குடி ஆவல்சூரன்பட்டி செக்போஸ்ட் அருகே பறக்கும் படை துணைத் தாசில்தார் வீரக்குமார் தலைமையில் எஸ்.ஐ., முருகேசன், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை கட்டுமான நிறுவன ஊழியர் சுந்தரபாண்டி விருதுநகரில் இருந்து மதுரைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி ஏற்பாட்டில், திருமங்கலம் சார் கருவூலத்தில் அதனை ஒப்படைத்தனர்.

ரூ. 2 லட்சம் பறிமுதல் உசிலம்பட்டி: தேனி ரோட்டில் தொட்டப்பநாயக்கனுார் விலக்கு பகுதியில் சதீஷ்குமார், எஸ்.ஐ., செல்வகுமாரி தலைமையிலான நிலையான கண்காணிப்புக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.தொட்டப்பநாயக்கனுாரில் இருந்து சென்னைக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்த சென்னை அபய் - செல்வி தம்பதியிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ. 2 லட்சத்தை கைப்பற்றினர். தேனியில் நடந்த தங்கள் மகள் திருமணத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்புவதாக கூறினர். தேர்தல் அதிகாரி உட்கர்ஷ்குமார் மூலமாக அரசு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. --

மொத்தம் ரூ. 11.50 லட்சம் பறிமுதல் மேலுார் சண்முகநாதபுரம் விலக்கில் பறக்கும் படை அதிகாரி ராகுல், எஸ்.ஐ., ராஜா வாகன சோதனை செய்தனர். திண்டுக்கல் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சந்திரசேகர் பத்திரப்பதிவுக்காக ஆர்.எஸ்., மங்கலத்திற்கு உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கொட்டாம்பட்டி பாண்டாங்குடி பகுதியில் பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணகுமார் ஆய்வின் போது சிங்கம்புணரி ஆட்டு வியாபாரி சேவுகமூர்த்தி உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.71 ஆயிரத்து 700 ஐ பறிமுதல் செய்தார். மேலுார் ஒன்றிய அலுவலகம் அருகே தேர்தல் அதிகாரி ஜான்சன் கமல் தாஸ், எஸ்.ஐ., ஜெயலட்சுமி ஆய்வில் விவசாயி பெரியசாமி உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1.34 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

நாவினி பட்டி, மில்கேட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ரவிவர்மன் ஆய்வில் காரைக்குடியில் நகை வாங்க காரில் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ 2.40 லட்சத்தை கேரள மாநிலம் குமாரியிடம் இருந்தும், இடையபட்டி முருகனிடம் இருந்து ரூ.1.34 லட்சத்தையும் பறிமுதல் செய்தார். பறிமுதல் பணத்தை தேர்தல் அதிகாரி சங்கீதா, உதவி தேர்தல் அதிகாரி முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி அழகுராஜா கோட்ட நத்தாம்பட்டி விலக்கில் ஆய்வு செய்தபோது புதுப்பட்டி பார்த்திபன் உரிய ஆவணமின்றி ரூ 1.50 லட்சம் கொண்டு வரவே பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டியிடம் ஒப்படைத்தார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us