ADDED : மார் 23, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி பகுதிகளில் தேர்தல் பணியாற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள், உதவி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
டி.ஆர்.ஓ., அன்பழகன், திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு பயிற்சி அளித்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவிதா, கிருஷ்ணகுமார், பார்த்திபன், அலுவலர்கள் பங்கேற்றனர். மனுத் தாக்கல் முதல் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் வரையான பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது
