ADDED : மார் 20, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரன் தலைமையில் போலீசாருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
உசிலம்பட்டி நகர், தாலுகா, வாலாந்துார், செக்கானுாரணி, உத்தப்பநாயக்கனுார், விக்கிரமங்கலம், எழுமலை, எம்.கல்லுப்பட்டியில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒலி பெருக்கி அமைக்க அனுமதி வழங்கும் போது கவனிக்க வேண்டியவை, தேர்தல் பிரசாரங்களின் போதும், தேர்தல் நடைபெறும்போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கினர்.
