ADDED : ஏப் 24, 2026 04:13 PM
அ நிறம் | அளவு
மதுரை: மேலுார் தொகுதி தேர்தலில் விதிமீறல் நடந்துள்ளதால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரவீன்குமாரிடம் சுயேச்சை வேட்பாளர் முருகன் மனு அளித்தார்.
அதில் தெரிவித்துள்ளதாவது: நான் பெரியாறு ஒருபோக விவசாயிகள் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர். ஏப். 20 முதல் 22 வரை சில கட்சி வேட்பாளர்கள் ஓட்டுக்கு தலா ரூ.ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுத்து தேர்தல் விதியை மீறியுள்ளனர். அந்நாட்களில் வாகன சோதனையும் நடக்கவில்லை. எனவே விசாரணை நடத்தி மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்க வேண்டும். சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடக்காததால் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
