ADDED : மார் 23, 2026 06:56 AM

அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் தொகுதியில் உள்ள பகுதிகளை தேர்தல் பொது பார்வையாளர் சமர்த் வர்மா ஆய்வு செய்தார். பிறகு தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் ஓட்டுப்பதிவின்போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா, உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டியன், துணைத் தாசில்தார் சுந்தரபாண்டியன் உடனிருந்தனர்.
