UPDATED : மே 01, 2026 11:02 PM
ADDED : மே 01, 2026 10:51 PM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் கிளைத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். செயலாளர் அபுதாஹிர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலளர் ஆதிஈஸ்வரன் சங்க கொடியேற்றினார்.
கூட்டத்தில், தனியார் மின்பணியளர்கள் அனைவரையும் சங்கத்தில் இணைக்க வேண்டும். தனியார் மின்பணியாளர்கள் தங்கள் மின் உரிமத்தை புதுப்பிக்கும் முறையை ஆன்லைன் மூலம் மாற்றம் கொண்டு வரவேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக மாற்ற வேண்டும்.
மின்கம்பி உதவியாளர் சான்றிதழ் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். மின்கம்பி உதவியாளர் தேர்வு எழுத அனுபவ சான்றிதழ் 5 ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.
