ADDED : ஜன 14, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம், மதுரை நகர், கே.புதுார், அனுப்பானடி கிளைகள் சார்பில் ஆண்டு விழா நடந்தது. கிளைத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அபுதாகிர், சங்கையா, கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாகேஸ்வரன், அமைப்புச் செயலாளர் யோகநாதன், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்டர்நேஷனல் காப்பர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் மின்கசிவு, பாதுகாப்பு குறித்து விளக்கம், பயிற்சி அளித்தார். மாவட்ட செயலாளர் ஆதிஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி பாலாஜி நன்றி கூறினார்.

