ADDED : மே 02, 2025 06:44 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மேதினத்தையொட்டி தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் சங்க கொடியேற்றும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ஆதீஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநில அமைப்புச் செயலாளர் யோகநாதன் முன்னிலை வகித்தார். கிளைத் தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் கோமதிநாயகம், முகமதுகான் கொடியேற்றினர். கிளைப் பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.
