/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 26, 2025 03:53 AM

மதுரை : மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மின்வாரியமே அவர்களுக்கு தினக்கூலியை வழங்க வேண்டும் எனக்கோரி மாநில அளவில் நேற்று மண்டலங்களில் சி.ஐ.டி.யூ., மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். மின்வாரிய அலுவலக வளாகத்தில் மாலை வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.
மதுரையில் ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
மண்டல செயலாளர் உமாநாத் நிறைவுரையாற்றினார்.
துணைத் தலைவர் குருவேல், திட்டச் செயலாளர்கள் அறிவழகன், செல்வராஜ், தேவராஜ், கருணாநிதி, காசிநாதன், ஜெயகாந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.