ADDED : மார் 14, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கே.புதுாரில் உள்ள மின்வாரிய தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய பொறியாளர்கள் கழகம், மின்வாரிய பொறியாளர்கள் யூனியன், மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிலை 1, 2 ல் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய பொறியாளர்கள் கழக மண்டல தலைவர் சுதன் தலைமை வகித்தார். மாநில சட்டத்துறை செயலாளர் துர்கா தேவி முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்க மண்டல செயலாளர் கதிர்வேல், இணை பொருளாளர் சுரேஷ் பேசினர். சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
