தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் இடம்; தேர்தல் பார்வையாளர் அதிருப்தி

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் இடம்; தேர்தல் பார்வையாளர் அதிருப்தி

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் இடம்; தேர்தல் பார்வையாளர் அதிருப்தி


ADDED : மார் 30, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 08:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில் மேற்கு தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் போதுமானதாக இல்லை என தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் அதிருப்தி தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதிக்கான 819 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மேற்கு தாலுகா அலுவலகத்தின் ஒரு பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார், நேற்று காலை தாலுகா அலுவலகம் வந்தார். அவரை டி.ஆர்.ஓ., அன்பழகன், தேர்தல் நடத்தும் அலுவலரான பச்சமுத்து வரவேற்றனர்.

அவர்களிடம் 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறை குறித்து கேட்ட தினேஷ்குமார், அருகில் இருந்த ஜன்னல் வழியே பார்த்து 'சுற்றுச்சுவர் இல்லையா' என அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 'ஸ்ட்ராங் ரூம்' அறை பின்பகுதிக்கு வந்துபார்த்தபோது ஜன்னல்கள் மரப்பலகையால் அடைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிர்ச்சியடைந்த தேர்தல் பார்வையாளர், 'எந்த மாதிரியான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது' எனக்கேட்டார். டி.ஆர்.ஓ., 'அறைக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன' என்றார். 'இது போதாது. இன்னும் கூடுதல் கேமராக்களை பொருத்த வேண்டும்' என தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதையறிந்து அவர் சென்ற சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீஸ் துணைகமிஷனர் இனிகோ திவ்யன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us