
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சோழவந்தான் பகுதி வீரமலை மகன் பொன்ராஜ் 23. மதுரை நகைக்கடை ஊழியர். நேற்று காலை அதே பகுதி ஜானகிராமனுடன் 33, டூவீலரில் மதுரைக்கு சென்றார். கீழமாத்துார் தனியார் பள்ளி அருகே வேகத்தடையில் தடுமாறி இருவரும் விழுந்தனர்.
அப்போது மேலக்கால் நோக்கி சென்ற 'செப்டிக் டேங்க்' லாரி மோதியதில் பொன்ராஜ் இறந்தார். ஜானகிராமன் காயமடைந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.