/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'சமக்ர சி க் ஷா' திட்ட நிதியை உடன் விடுவிக்க வேண்டும்; ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்
/
'சமக்ர சி க் ஷா' திட்ட நிதியை உடன் விடுவிக்க வேண்டும்; ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்
'சமக்ர சி க் ஷா' திட்ட நிதியை உடன் விடுவிக்க வேண்டும்; ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்
'சமக்ர சி க் ஷா' திட்ட நிதியை உடன் விடுவிக்க வேண்டும்; ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 10:32 PM
மதுரை : ''தமிழகத்திற்கு சமக்ர சிக் ஷா திட்ட நிதியை நிபந்தனையின்றி மத்திய அரசு உடன் விடுவிக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் இப்பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கைப்படி மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கான மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்ட நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஹிந்தியை திணிப்பதற்கும், ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உரிமை பெறுவதை தடுப்பதற்கும் மத்திய அரசு முயற்சிக்கிறது.
தமிழ், ஆங்கிலம் உள்பட கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓவியம், உடற்கல்வி, கணினி போன்ற கல்வி இணை பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில் மூன்றாவதாக மொழிக்கு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 45 ஆயிரம் ஹிந்தி அல்லது பிற மொழி பாட ஆசிரியர் நியமிக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ. 3 ஆயிரம் கோடி மாநில அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
ஒரு ஆண்டிற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை நம்பி எப்படி மும்மொழி கொள்கையை ஏற்க முடியும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கு தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றார்.

