/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவதில் தாமதம் தளர்வு கோரி ஊழியர்கள் போராட்டம்
/
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவதில் தாமதம் தளர்வு கோரி ஊழியர்கள் போராட்டம்
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவதில் தாமதம் தளர்வு கோரி ஊழியர்கள் போராட்டம்
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவதில் தாமதம் தளர்வு கோரி ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 08, 2025 01:31 AM

மதுரை: ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவதில் தளர்வு வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன்,மாநில துணைத் தலைவர் செல்லதுரை தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் காளியப்பன், துணைச் செயலாளர் பாண்டியன், அமைப்பாளர் தங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பாலமுருகன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து விற்பனை நிலையத்திற்கு வரும் முன்பே எடை அளவிட்டு பதிவு செய்யப்படுகிறது. வாணிபக் கழகத்தில் உள்ள எடை தராசையும், நியாய விலைக் கடைகளிலுள்ள தராசையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.நியாய விலைக் கடைக்கு சேதாரக் கழிவுகள் வழங்க வேண்டும். அனைத்து கடைகளிலும் எடையாளர் நியமிக்க வேண்டும்.
கூட்டுறவு பண்டக சாலையில் நடக்கும் முறைகேடுகள் மீதும்,பணியாளர்களுக்கு முறையான சலுகை வழங்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடும்ப அட்டைதாரரின் விரல் ரேகைப் பதிவை 40 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் என உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற பகுதிகளில் போதிய அளவில் நெட்வொர்க் கிடைக்காததால் துல்லியமாககைரேகை பதிவதில் கால தாமதமாகிறது.
பலருக்கு கைரேகை சரியாக பதிவாகாமல் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றார்.

