ADDED : மார் 01, 2024 06:37 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலம் அரசு மருத்துவ மருத்துவமனையில் நோயாளிகளிடம் தற்காலிக ஊழியர்கள் பணம் பெறுவதாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று இணை இயக்குனர் செல்வராஜ், திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் ராம்குமார் விசாரணை நடத்தினர்.
இதில் நோயாளிகளிடம் பணம் பெற்றதாக தற்காலிக ஊழியர்கள் கார்த்திக், முத்தையா இருவரை இணை இயக்குனர் செல்வராஜ் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பிற மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தொடர்ந்தால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
