UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மதுரைக்கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் அக்.10 ல் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்க உள்ளன. எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, பட்டம், பொறியியல் முடித்தவர்கள் கல்விச் சான்று, ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் பங்கேற்கலாம்.
இதில் வேலை தரும் நிறுவனங்கள் தங்கள் விவரங்களை, www.tnprivatejobs.tn.gov.in ல் பதிவு செய்ய வேண்டும். இதில் வேலை பெற்றால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு பாதிக்காது என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
