ADDED : ஜன 07, 2026 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜன.10 காலை 9:00 மணிக்கு வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
இம்முகாமில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகளுடன் 250க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்க விரும்பவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கல்விச்சான்றுகளின் நகல், சுயவிவர குறிப்புகளுடன் நேரில் வரவேண்டும். அனுமதி இலவசம். பங்கேற்க விரும்பும் நிறுவனங்களும் மேற்கண்ட இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

