ADDED : ஜூன் 17, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் பின்புறம் பொன்மலை அடிவாரத்தில் பல ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்புகள் மற்றும் கல்லறைகள் இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தனிநபர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துணைத் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பு கல்லறைகள், வீடு, மாட்டுகொட்டம் மற்றும் வேலிகளை இயந்திரம், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றினர். இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
