ADDED : ஆக 21, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவி மேகலாதேவி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஒய்யம்மாள், மாவட்ட செயலாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணைத்தலைவி அமுதா, மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி பங்கேற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.