ADDED : ஜன 01, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பில் மின்சிக்கன வார விழா ஆண்டுதோறும் டிசம்பரில் நடைபெறும். ஒருவாரம் நடைபெறும் இந்நிகழ்ச்சியை, மண்டல தலைமைப் பொறியாளர் பழனிச்சாமி துண்டு பிரசுரம் வழங்கி துவக்கி வைத்தார். மேற்பார்வை பொறியாளர்கள் பத்மாவதி, தேவிசித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலுார், ஒத்தக்கடை, உசிலம்பட்டி, திருமங்கலம், சமயநல்லுார், வாடிப்பட்டி பகுதியில் வாகனம் மூலம் மின்சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

