தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்சேமிப்பு வாரவிழா

 மின்சேமிப்பு வாரவிழா

 மின்சேமிப்பு வாரவிழா


ADDED : டிச 18, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட மின்பகிர்மானம் சார்பில் 'மின்சேமிப்பு சிக்கன வாரவிழா' மண்டல அலுவலகத்தில் தலைமை பொறியாளர் பழனிசாமி தலைமையில் நடந்தது.

மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், 'இன்றைய தலைமுறையினர் மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்க வேண்டிய அவசியம், அதற்கான வழிமுறைகளை விளக்கினார். சாலை விபத்துகளைப் போலவே மின்விபத்துகளையும் பொதுமக்கள் மனதுவைத்தால் தடுக்கலாம்' எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவ்விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்த பிரசார வாகனத்தை தலைமை பொறியாளர் துவக்கி வைத்தார். செயற்பொறியாளர்கள் சோபியா, நிலமதி, கண்ணன், உதவி செயற்பொறியாளர் தேவிசித்ரா பங்கேற்றனர். மதுரை மின்பகிர்மான பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us