/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மும்பை விமானத்திற்கு உற்சாக வரவேற்பு
/
மும்பை விமானத்திற்கு உற்சாக வரவேற்பு
ADDED : பிப் 24, 2024 05:02 AM

மதுரை : மதுரைலிருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் நேரடி விமானத்திற்கு மதுரையில் தண்ணீர் பீய்ச்சி வரவேற்பளிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து மும்பைக்கு செல்ல இதுவரை சென்னை வழியாக விமானங்கள் இயக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனம் மதுரை - மும்பை நேரடி விமான சேவையை நேற்று (பிப்.,23) முதல் துவக்கியது. மும்பையில் காலை 6:30 மணிக்கு கிளம்பி மதுரைக்கு காலை 9:00 மணிக்கு வருகிறது. மதுரையில் காலை 11:00 மணிக்கு கிளம்பி, மதியம் 1:30 மணிக்கு மும்பை சென்று சேரும்.
முதல்நாளான நேற்று மதுரை வந்த விமானத்திற்கு நிலைய அதிகாரி ஆனந்த் ராஜ், நிலைய இயக்குநர் முத்துக்குமார், முதன்மை பாதுகாப்பு அலுவலர் கருப்பசாமி, மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கமல்சிங் கேக் வெட்டி கொண்டாடினர்.
தரை இறங்கிய விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மும்பையில் இருந்து மதுரைக்கு 98 பேரும், மதுரையில் இருந்து மும்பைக்கு 102 பேரும் பயணித்தனர்.