ADDED : பிப் 21, 2026 07:30 AM
மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி யில் தொழில் முனைவோர் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். தலைவர் கணேஷ் பேசுகையில், ''கே.எல்.என்., கல்விக்குழும நிறுவனத் தலைவர் கிருஷ்ணன், ஜெட்பம்ப் தொழில்நுட்பத்தை ஜப்பானில் கற்றுக்கொண்டு 1960ல் இந்தியாவில் முதல்முறையாக அறி முகப்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக விளங்கினார். மாண வர்கள் அவரை பின்பற்ற வேண்டும்'' என்றார்.
செயலாளர் கார்த்திக், பொருளாளர் பன்சிதர் தொழில் முனை வோருக்கான குண நலன்கள் குறித்து பேசினர்.
எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு, வசதி அலு வலகம் உதவி இயக்கு நர் ஜெய செல்வம், முன்னோடி வங்கி மேலாளர் திலீபன், எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம் உதவி இயக்குநர் தினகரன், தொழில் முனைவோர் மையம் மனோகரன், தமிழ்நாடு தொழில் முனைவோர் மையம், புத்தாக்க நிறுவனம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா, கல்லுாரி தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் சகாதேவன் உள்ளிட்டோர் பேசினர்.
மின்னணு துறைத் தலைவர் ஆதிராஜன் நன்றி கூறினார்.

