UPDATED : நவ 12, 2026 07:27 PM
ADDED : நவ 12, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: பெங்களூரு அங்கக மற்றும் இயற்கை விவசாயத்திற்கான மண்டல மையம், மாநில வேளாண், தோட்டக்கலைத்துறைகளின் சார்பில் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உயிர் உரம் தயாரிப்பு தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது.
வேளாண் துணை இயக்குநர் ராணி, மையத் தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தனர். தற்போதைய சூழலில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து அங்கக மற்றும் இயற்கை விவசாயத்திற்கான மண்டல மைய உதவி இயக்குனர் பிரியங்கா பிரதான் பேசினார். இயற்கை விவசாயத்தில் நாட்டு விதைகளின் முக்கியத்துவம், விதை நேர்த்தி குறித்து விதை மற்றும் இயற்கைச் சான்றிதழ் உதவி இயக்குநர் மகாலட்சுமி விளக்கினார்.
