ADDED : மார் 11, 2024 06:15 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார், வடக்கு நாவினிப்பட்டி மூங்கில் மேட்டில் முத்துப்பிள்ளை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு வடக்குநாவினிப்பட்டியில் இருந்து சாமியாடி அம்மனுக்கு உரிய பூஜை பொருட்களை பெட்டியில் சுமந்து செல்ல 4 கி.மீ., தொலைவில் உள்ள முத்துப்பிள்ளை அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பின் தொடர்ந்தனர்.
அங்கு பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையல் இட்டனர். தொடர்ந்து நள்ளிரவு பக்தர்கள் காணிக்கை, நேர்த்திக்கடனாக வழங்கிய 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி, இன்று (மார்ச் 10) பொங்கல் வைத்து படையல் செய்வர். இதையடுத்து சமத்துவ அன்னதானம் நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.
