ADDED : ஆக 26, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை துணை மண்டல இ.எஸ்.ஐ., இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் மதுரை போத்தீஸ் நிறுவனத்தில் ஓய்வூதிய ஆணை, ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும் நிகழ்வு நடந்தது.
போத்தீஸ் நிறுவனத்தின் செக்யூரிட்டி அழகர்சாமி, பணியின்போது மாரடைப்பால் இறந்தார்.
அவருக்கு இ.எஸ்.ஐ., காப்பீடு இருந்ததால் அவரது குடும்பத்திற்கு முதல் ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 681 ஐ வழங்கினர்.
இ.எஸ்.ஐ., இணை இயக்குனர் மீனாட்சிசுந்தரம் அத்தொகையை அழகர்சாமியின் மனைவி, தாய், மகன், மகளிடம் வழங்கினார்.
மேலும் இ.எஸ்.ஐ., திட்டத்தில் உள்ள ஸ்பிரீ, அம்னஸ்டி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் பழங்காநத்தம் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வி, போத்தீஸ் சார்பில் பொன்னாயிரம், சுபலட்சுமி உடனிருந்தனர்.