/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இ.எஸ்.ஐ.சி., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
/
இ.எஸ்.ஐ.சி., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ADDED : டிச 28, 2024 07:02 AM

மதுரை :  மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ.சி.,யின் மதுரை மண்டல அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது மதுரை துணை மண்டலம். 4 லட்சத்து 37 ஆயிரத்து 820 தொழிலாளர்களையும், 4 லட்சத்து 94 ஆயிரத்து 30 காப்பீட்டுதாரர்களையும், 19 ஆயிரத்து 488 தொழில் நிறுவனங்களையும் உள்ளடக்கியது.
மண்டல துணை இயக்குனர் பொறுப்பு அதிகாரியாக இருந்த மீனாட்சி சுந்தரம், இணை இயக்குநர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், ''இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களின் பணப்பலன்கள் துரிதமாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றடையவும், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் பதிவு செய்யவும் முன்னுரிமை வழங்கப்படும். காப்பீட்டாளர்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்'' என்றார்.
மண்டல துணை இயக்குநர் பதவி வகித்த முகமது அப்துல் கரீம், கேரள மாநிலம் கொல்லம் துணை மண்டல இணை இயக்குநர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

