ADDED : மார் 05, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
மதுரை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் 75ம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி இருவார கொண்டாட்டம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கே.கே.நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் இன்று காலை 11:00 மணிக்கு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான குறைதீர் முகாம் நடக்க உள்ளது.
இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் இம்முகாமில் பங்கேற்று, தங்கள் சந்தேகங்கள், குறைகளை நேரடியாக முன்வைத்து தீர்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
