நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் லுார்து அன்னை சர்ச் ஆண்டு விழாவை முன்னிட்டு நற்கருணை பவனி விழா நடந்தது. இதையொட்டி துாத்துக்குடி பனிமயமாதா சர்ச் பாதிரியார் ஸ்டார்வின் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது.
தொடர்ந்து நடந்த நற்கருணை பவனிக்கு துாத்துக்குடி டிவைன் மெர்சி தியான இல்ல பாதிரியார் கிராசிஸ் மைக்கேல், லுார்து அன்னை சர்ச் பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், ஜஸ்டின், பிரபு, அஜிலாஸ் மற்றும் கன்னியாஸ்திரிகள் முன்னிலை வகித்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சர்ச் பொறுப்பாளர்கள், இளைஞர்கள் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

