/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒவ்வொருவரும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு
/
ஒவ்வொருவரும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு
ஒவ்வொருவரும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு
ஒவ்வொருவரும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு
ADDED : ஜூன் 02, 2024 11:06 AM

மதுரை: மதுரை தியாகராசர் கல்லூரியும், அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து, சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
விசுவாமித்திரர் வேள்விக்காத்தல் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசினார் அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொருவரும் அவரவர் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும். முன்னோர்களை வணங்க வேண்டும். முயற்சி செய்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
நல்லதை யார் சொல்கிறார்களோ கெட்டதை யார் தடுக்கிறார்களோ அவர்தான் குரு. சிஷ்யனின் நன்மையை அறிந்து அறியாமை இருளை யார் போக்குகிறார்களோ அவர் தான் குரு. ஸ்ரீ ராமனும் சீதா தேவியும் வாமனப் பெருமாளை வழிபட்டார்கள். ஒவ்வொருவரிடம் பக்தி இருக்க வேண்டும். ஆனால் கர்வம் இருக்கக் கூடாது. இன்று நாம் கஷ்டம் வந்தால் தான் இறைவனை தேடி ஓடுகிறோம். சதா சர்வ காலமும் இறைவனை வழிபட வேண்டும். ஒரு தடவை இராமாயணம் கேட்டால் காயத்ரி மந்திரம் சொன்னதற்கு சமம்.
கணவன் பிறருக்கு தானம் கொடுக்க நினைக்கிற போது மனைவி அதை தடுக்கக்கூடாது. தடுத்தால் அவருடைய சொந்தக்காரன் கூட உடுப்பதும் உண்பதும் இன்றி கெடுவார்கள் என்கிறார் வள்ளுவர். புரந்தரதாசர் இல்லறத்தின் சிறப்பே தானம் செய்வது தான் என்கிறார். காசி ராமேஸ்வரம் போய் விட்டு வந்தால் மட்டும் போதாது. இயலாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சோம்பல் இல்லாத ராஜா உலகத்தை ஜெயிக்கலாம் உலகனைந்த பெருமாளை போல என்கிறார் வள்ளுவர்.
கேரள மக்கள் வாமனப் பெருமாளை கொண்டாடுகிறார்கள். அதனால் தான் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வரும் 16ம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.