ADDED : மார் 25, 2026 11:35 PM
திருமங்கலம்: திருமங்கலம் சட்டசபை தொகுதியில் 351 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. சட்டசபைத் தேர்தலின் போது இச்சாவடிகளில் பயன்படுத்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
மொத்தம் 423 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,மிஷின்), கன்ட்ரோல் யூனிட்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு ஓட்டு இயந்திரம் மட்டுமே தேவை என்றாலும், பழுது ஏற்பட்டால் பயன்படத்தும் வகையில், 'ரிசர்வ்'வில் வைத்திருப்பதற்காக 423 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்தும் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மனேஷ்குமார், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
