/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிச.22ல் முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குறைதீர் கூட்டம்
/
டிச.22ல் முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குறைதீர் கூட்டம்
டிச.22ல் முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குறைதீர் கூட்டம்
டிச.22ல் முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குறைதீர் கூட்டம்
ADDED : நவ 22, 2024 04:36 AM
மதுரை: 'ஸ்பர்ஸ்' என்ற அமைப்பின் மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம் மதுரை மடீட்சியா அரங்கில் டிச.22 காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.
ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள், ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில் நடைபெறும்.
இதில் சென்னை தக்ஷின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் ஆபீஸர் கரன்பீர்சிங் பிரார், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் பங்கேற்க உள்ளனர்.
உயிர்சான்று அளிக்க இயலாதோர், தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓர் ரேங்க், ஓர் பென்ஷன் ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள், குறைகள் நிவர்த்தி செய்யப்படும். முகாமில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் படை பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி பாஸ் புக் ஆகியவற்றின் அசலுடன் நேரில் வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.